மோசடி மன்னன் விஜய் மல்லையாவை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

டிசம்பர் 10, 2018 505

லண்டன் (10 டிச 2018): வங்கிகள் மோசடி மன்னன் விஜய் மல்லையாவை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், 2016 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதன்படி, விஜய் மல்லையாவிடம் கடன் பாக்கியை வசூலித்து தரும்படியும், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் 13 இந்திய வங்கிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்பு இன்று வெளியானது.

அந்த தீர்ப்பில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...