தோல்வியில் முடிந்த பாஜக அழைப்பு விடுத்த கடையடைப்பு போராட்டம்!

டிசம்பர் 15, 2018 808

திருவனந்தபுரம் (15 டிச 2018): கேரளாவில் பாஜக நடத்திய கடையடைப்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது.

சபரிமலை விவகாரத்தில் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. கேரள தலைமை செயலகம் முன்பு பாஜக தொண்டர் தீகுளித்து உயிரிழந்ததை அடுத்து இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. எனினும் ஒரு சில இடங்கள் தவிர போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

பல இடங்களில் கடையடைப்பு கோரி வந்த பஜகவினரை பொதுமக்கள் துரத்தி அடித்தனர். பாலக்காட்டில் மட்டும் பேருந்துகள் கல் வீசி உடைக்கப் பட்டன. ஆட்டோ இதர வாகனங்கள் ஓடியது. பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் செயல்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...