முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் சட்ட வாரியம் முடிவு!

டிசம்பர் 16, 2018 555

புதுடெல்லி (15 டிச 2018): முத்தலாக் சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாட அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் ஜாஃபர் யாப் ஜிலானி தெரிவிக்கையில், மத்திய அரசு இயற்றியுள்ள முத்தலாக் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டி உச்ச நீதிமன்றம் இறுதி முடிவெடுக்க கோரிக்கை வைக்கப் படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஒரே நேரத்தில் முத்தலாக் கொடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல எனினும் இதற்கு மூன்று வருட சிறைத் தண்டனை என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...