மறைந்த மகளின் நினைவாக பாடகி சித்ரா செய்த காரியம்!

டிசம்பர் 17, 2018 808

திருவனந்தபுரம் (17 டிச 2018): மறைந்த தனது மகளின் நினைவாக பிரபல பாடகி சித்ரா கேரள கேன்சர் மருத்துவ மனை ஒன்றில் கீமோ தெரப்பி பிரிவு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார்.

பிரபல பாடகி சித்ரா பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். அவருக்கு திருமணமாகி நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை எதிர் பாராத விதமாக கடந்த 2011 ஆம் ஆண்டு துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது. இவ்விவகாரம் திரையுலகை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இதனை தொடர்ந்து மகள் நினைவாக பல்வேறு நற்பணிகளை சித்ரா செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரிஸ் சர்வதேச கேன்சர் மையத்தில் மகள் நினைவாக கீமோ தெரப்பி பிரிவு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார்.

இதன் தொடக்க விழாவில் மகளை நினைத்து சித்ரா மேடையிலேயே கண்கலங்கினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...