மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ - ஆறு பேர் பலி!

டிசம்பர் 18, 2018 498

மும்பை (17 டிச 2018): மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை, அந்தேரியில் உள்ள காம்நகரில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இஎஸ்ஐசி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு மாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலர் தாங்களாகவே வெளியேறினர். உள்நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அப்போது மருத்துவமனையில் இருந்து வெளியேற முயன்ற 6 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

இந்த தீ விபத்தில் 106 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...