சிறுவன் உட்பட இரண்டு முஸ்லிம்களை கொன்ற எட்டு பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை!

டிசம்பர் 22, 2018 626

ராஞ்சி (22 டிச 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்காக இருவரை படுகொலை செய்த எட்டு பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2016 மார்ச் மாதம் மஸ்லூம் அன்சாரி (35), இம்தியாஸ் கான் (12) ஆகிய இருவரை பசு பயங்கரவாத கும்பல் படுகொலை செய்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவில் வெள்ளிக்கிழமை ராஞ்சி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த படுகொலையில் தொடர்புடைய எட்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா 25000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பசு பயங்கரவாத கும்பலுக்கு வழங்கப்படும் இரண்டாவது ஆயுள் தண்டனை இதுவாகும். ஏற்கனவே அலிமுத்தின் படுகொலை வழக்கில் பாஜக தலைவர் நித்யானந்த் மேட்டோ உட்பட 11 பேருக்கு ராம்கார் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...