சினிமா டிக்கெட் விலை குறைகிறது!

டிசம்பர் 23, 2018 490

புதுடெல்லி (22 டிச 2018): திரையரங்கு டிக்கெட், டிவி மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

28 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தின் கீழ் இருந்து வந்த 6 பொருட்கள் மீதான வரியைக் குறைத்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அன்மையில் ஜிஎஸ்டியில் உள்ள 1,200 பொருட்களில் 0.5 அல்லது 1 சதவீத பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி விகிதத்தில் இருக்கும் என்று உறுதி செய்ததன் முதற்கட்ட நடவடிக்கையாகவும், தேர்தல் 2019-ஐ இலக்காக வைத்துள்ளதையும் இது காட்டுகிறது.

ரூ. 100 வரையிலான திரையரங்கு டிக்கெட் கட்டணங்களுக்கு இருந்து வந்த 18 சதவீத ஜிஎஸ்டி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட் கட்டணங்களுக்கு 28 சதவீதமாக இருந்து வந்த ஜிஎஸ்டி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கணினி மானிட்டர், டிவி திரை, டயர், பவர் பேங்க், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வீடியோ கேம் உள்ளிட்ட பொருட்கள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.

சிறப்பு விமானங்களுக்கு இனி பிரீமியம் வரி இல்லை. சூரிய மின்சக்தி மற்றும் பிற மாற்றும் எரிசக்தி பொருட்கள் மீதான ஜிஎஸ்டியும் 5 சதவீதமாகக் குறைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...