சபரிமலை சென்ற மேலும் இரண்டு இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்!

டிசம்பர் 24, 2018 440

திருவனந்தபுரம் (24 டிச 2018): சபரிமலை நோக்கி சென்ற 2 இளம்பெண்கள், சன்னிதானத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை செயல்படுத்த ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். நிலக்கல் பம்பை, மரக்கூட்டம், அப்பச்சிமேடு என வழியிலேயே தடுத்து நிறுத்தி பக்தர்கள் போராட்டம் நடத்துவதால், 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை சன்னிதானம் செல்லும் முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியில் முடிவடைந்து வருகின்றன.

சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆபாச நடிகை கைது! ...

சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிர்பார்த்தது நடந்தது! ...

நேற்றும் தமிழகத்தில் இருந்து மனிதி என்ற அமைப்பை சேர்ந்த 11 பெண்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, திரும்ப நேரிட்டது. போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டதாகவும், தங்களை பல மணி நேரம் காக்க வைத்திருந்ததால் பக்தர்களின் கூட்டம் திரளவும் போராட்டம் நடத்தவும் போலீசார் வழிவகுத்து விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து என்ற பெண்ணும், மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா என்ற பெண்ணும், கேரள அரசுப் போக்குவரத்து கழக பேருந்தின் மூலம் பம்பை வந்து, அங்கிருந்து சபரிமலையை நோக்கி ஏறத் தொடங்கினர்.

சபரிமலை புனிதத்தை கெடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் மீது சபரிமலை நிர்வாகம் குற்றச் சாட்டு! ...

சபரிமலையில் சங்பரிவார் அட்டூழியம் - பெண் மற்றும் ஊடகங்கள் மீது தாக்குதல்! ...

காலை 7.30 மணியளவில் மரக்கூட்டம் என்ற இடத்தை அடைந்தபோது, அங்கு போராட்டம் நடத்திய பக்தர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். போலீசார் பாதுகாப்புடன் தொடர்ந்து சென்ற அவர்கள், சபரிமலை சன்னிதானத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டு 2 பெண்களையும் சன்னிதானம் செல்ல அனுமதிகக் கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேசமயம் தங்களை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கும் வரை தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக 2 பெண்களும் கூறிவருகின்றனர். கூடுதல் போலீசாரை வரவழைத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கோழிக்கோட்டில் கோயிலாண்டி என்ற இடத்தில் பிந்துவின் வீட்டின் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலை விவகாரம் குறித்து கனிமொழி எம்.பி பேச்சு! ...

சபரிமலை விவகாரத்தில் அமைச்சர் ஸ்மிரிதி இராணி அருவருக்கத் தக்க பேச்சு! ...

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...