பிரதமர் மோடி வெற்று மனிதர் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!

டிசம்பர் 24, 2018 434

புதுடெல்லி (24 டிச 2018): பிரதமர் மோடி மக்களுக்கு எதுவுமே செய்யாத வெற்று மனிதர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,‘தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மோடி நிறைவேற்ற தவறி விட்டார். குஜராத் முதல் மந்திரியாக 12 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது தனது சொந்த மாநிலத்துக்கே அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால், பல பெரிய காரியங்களை செய்துவிட்டதாக எல்லோரையும் நம்ப வைத்தார்.

நாங்கள் அனைவரும்கூட இதை நம்பினோம். இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நம்பினார்கள், ஆனால், கடைசியில் அது மோசடி என்று தெரியவந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் குஜராத்தை நாங்கள் பின்னுக்குத்தள்ளி முன்னேறி சென்று விடுவோம் என்பதால் மோடி எங்களை வஞ்சித்து விட்டார்.

அன்று தன்னைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை என்று அவர் பிரசாரம் செய்து வந்தார். இதையும் நாங்கள் நம்பினோம். ஆனால், அவர் எதற்கும் தகுதி இல்லாதவர், வெற்று மனிதர் என்பது இன்று தெரிந்து விட்டது.

பணபலம், ஆள்பலத்தை பயன்படுத்தி அனைவரையும் பயமுறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று அவர் நினைக்கிறார்’ என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...