கர்நாடக முதல்வர் குமாரசாமியின் தொலைபேசி உரையாடல்தான் இப்போது வைரல்!

டிசம்பர் 25, 2018 547

பெங்களூரு (25 டிச 2018): கர்நாடக முதல்வர் குமாரசாமி 'இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ளுங்கள், பிரச்சினை வராது' என்று செல்போனில் பேசிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கும்பல் அவரை மறித்து வெட்டிக் கொலை செய்தது. இதனால் மைசூரு சாலையிலும், திண்டுக்கல் பெங்களூரு சாலையிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் நேற்று மாலை மறியல் செய்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கொலைச் சம்பவம் குறித்து முதல்வர் எச்.டி.குமார சாமியிடம் சிலர் செல்போனில் கொலை நடந்த சிறிது நேரத்தில் தகவல் தெரிவித்தனர். அப்போது, அவர் செல்போனில் பேசியதை ஊடகத்தினர் பதிவு செய்துள்ளனர். குமாரசாமி பேசுகையில்” பிரகாஷ் மிகவும் நல்லவர். எதற்காக அவரைக் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. பிரகாஷை கொலை செய்தவர்களை ஈவுஇரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றுவிடுங்கள். பிரச்சினை ஒன்றும் வராது” என்று பேசினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...