கடும் வீழ்ச்சியடைந்த இந்திய பங்குச் சந்தை!

டிசம்பர் 26, 2018 452

புதுடெல்லி (26 டிச 2018): இன்றைய இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்றைய துவக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 287 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது...

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 287 புள்ளிகள் சரிவுடன் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 359.17 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 35,096.65 புள்ளிகளாக சரிந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி பொறுத்தமட்டில் 111.75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10,553.25 புள்ளிகளாக குறைந்தது.

சென்செக்சில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் கோல் இந்தியா, மாருதி சுசுகி ஆகிய இரு நிறுவனங்களை தவிர அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை சரிவுடனே காணப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பங்குகள் 3% அதிகமாக சரிவுடன் காணப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...