உத்திர பிரதேசம்: திடீர் கலவரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பலி!

டிசம்பர் 29, 2018 544

லக்னோ (29 டிச 2018): உத்திர பிரதேசத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.

உத்திர பிரதேசம் காஜிபூரில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பொது கூட்டம் நடைபெற்றது. இதனையொட்டி ஊர்வலமும் நடைபெற்றது. பொதுக் கூட்டட்தை முடித்துக் கொண்டு வாகனத்தில் வந்தவர்கள் மீது நிஷாத் பார்ட்டியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் காண்ஸ்டபிள் மீதும் கல்லெறி தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கான்ஸ்டபில் உயிரிழந்துள்ளார். 15 க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் உத்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இதே மாதம் உத்திர பிரதேசத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபோத் குமார் என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...