முஸ்லிம் லீக் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை?

டிசம்பர் 30, 2018 476

திருவனந்தபுரம் (30 டிச 2018): முத்தலாக் சட்ட மசோதா குறித்த ஓட்டெடுப்பின் போது நாடாளுமன்றம் செல்லாத முஸ்லிம் லீக் எம்.பி கேடி குஞ்சாலி குட்டி மீது நடவடிக்கை எடுக்கப் படலாம் என தெரிகிறது.

முத்தலாக் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வியாழன் அன்று அமுல் ஆனது. இதற்கு எதிராக 11 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் சட்டம் இயற்றப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. எனினும் முஸ்லிம் எம்.பிக்கள் இந்த மசோதாவிற்கு எதிராக விவாதங்களில் பங்கேற்றனர். குறிப்பாக அதிமுக எம்.பி அன்வர் ராஜா தமிழிலேயே மத்திய அரசை கடுமையாக சாடியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இதற்கிடையே முக்கிய கட்சியான முஸ்லிம் லீக் கட்சியின் எம்பி கேடி குஞ்சாலி குட்டி இந்த ஓட்டெடுப்பின் போது பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கட்சிக்குள்ளும் வெளியிலும் குஞ்சாலிக் குட்டிக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த சமயத்தில் துபாய் சென்றுள்ள குஞ்சாலி குட்டி நாடு திரும்பியதும் இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கட்சி அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...