திரண்ட 35 லட்சம் மகளிர் - மிரண்ட இந்துத்வா அமைப்பினர்!

ஜனவரி 02, 2019 647

திருவனந்தபுரம் (02 ஜன 2019): கேரளாவில் நடத்தப் பட்ட மகளிர் சுவர் பேரணி உலகையே அதிர வைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கேரள அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு பாஜகவும் எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, பிரமாண்ட மனித சங்கிலி பேரணிக்கு அழைப்பு விடப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு, முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்த இந்த பேரணியில், வடக்கே காசர்கோடில் தொடங்கி, திருவனந்தபுரம் வரை சுமார் 620 கி.மீட்டர் தூரத்திற்கு 35 லட்சம் பெண்கள் மனித சுவர் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே காசர்கோடில் பேரணியில் ஈடுபட்ட பெண்கள் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலவரக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

உலக அளவில் மிகப்பெரிய மகளிர் போராட்டமாக இது கருதப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...