ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் - நிர்மலா சீதாராமனை விளாசிய ராகுல்!

ஜனவரி 06, 2019 413

புதுடெல்லி (06 ஜன 2019): ரஃபேல் விவகாரத்தில் பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து அடுக்கடுக்காக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த ஒரு ஆர்டரும் பெறப்படவில்லை.

எனவே, பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி ஆர்டர் தந்ததற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். இல்லையேல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் ஆணித்தரமான பேச்சு, பலரின் புருவங்களை வியப்பில் உயர்த்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சரின் முன்னுப் பின் முரணான இத்தகைய பேச்சுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

 

ரஃபேல் ஊழல் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட பரபரப்பு ஆடியோ உரையாடல் - அதிர்ச்சியில் பாஜக!

அனில் அம்பானிக்கு பரிசு வழங்கத்தான் பிரதமர் பதவியா? - விளாசும் ராகுல் காந்தி!

ரபேல் ஊழலின் நேரடி குற்றவாளிகள் அந்த இருவர்!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...