மத்திய அரசுக்கு ரூ 40 ஆயிரம் கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு!

ஜனவரி 08, 2019 351

புதுடெல்லி (08 ஜன 2019): மத்திய அரசுக்கு ரூ 40 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கி கடனாக வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருக்கும் நிதியில் இருந்து அதிக தொகையை கேட்டு மத்திய அரசு நெருக்கடி தருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், வரும் மார்ச் மாதத்திற்குள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் டிவிடெண்ட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால டிவிடெண்டாக 40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...