ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயன்ற சமூக சேவகர் பெண் மீட்பு!

ஜனவரி 08, 2019 349

மும்பை (08 ஜன 2019): ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்தபடி தற்கொலைக்கு முயன்ற சமூக ஆர்வலர் பெண்ணை அவரது நண்பர்கள் மூலம் தற்கொலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விருசாலி காம்லே. சமூக அமைப்பு ஒன்றில் பணியாற்றி வந்த இவருக்கு பாலியல் தொல்லைகளை சிலர் கொடுத்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த அவர் அங்கிருந்து விலகினார். எனினும், விரக்தி தீராததால் பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்து தனக்கு நடந்ததை கூறி, கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். அதனை குடிக்கவும் செய்தார்.

அப்போது, அந்த லைவ் வீடியோவைப் பார்த்த சிலர் பதறிப்போய் அங்குள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து, காம்லேவின் வீட்டுச் சென்ற போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...