முன்னாள் பாஜக எம்.எல்.ஏ ரெயிலில் வைத்து சுட்டுக் கொலை!

ஜனவரி 08, 2019 403

சுராஜ்பாரி (08 ஜன 2019): குஜராத் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ஜயந்தி பன்சாலி ஓடும் ரெயில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

பன்சாலில் சிவாஜி நாகரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புஜ்ஜிலிருந்து அஹமதாபாத் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாலி புஜ் மாவட்டம் அப்டாசாவில் 2007 ஆம் ஆண்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...