நாடு முழுவதும் இரண்டாவது நாள் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஜனவரி 09, 2019 338

புதுடெல்லி (09 ஜன 2019): நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, AICCTU, UTUC, TUCC, LPF மற்றும் SEWA ஆகிய 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலுமிருந்து சுமார் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் என பல்வேறு சங்கங்களில் உள்ளவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநில போக்குவரத்து கழகங்கள், ஆட்டோ டாக்சி ஓட்டுனர் சங்கங்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தொலைத் தொடர்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், பெங்களூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் பாதிப்பு கூடுதலாக இருந்தது. மேற்குவங்கத்தில் சில இடங்களில் கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கேரளாவில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இரண்டுநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் போராட்டம் வன்முறையாகவும் வெடித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...