மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை - அப்படியானால் யார்?

ஜனவரி 09, 2019 706

சென்னை (09 ஜன 2019): எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில்லை என்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது.

நாட்டை ஆள்வது பாஜகவாக இருந்தாலும் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக எண்ணியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக மோடியை வேட்பாளராக அறிவிக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ் தான்.

இந்நிலையில் சென்னையில் ஜனவரி 5ஆம் தேதி முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கூட்டம் நடைபெற்றுவருகிறது.. 2019 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்களை வகுக்கும் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் எனப் பலத் தரப்பிலும் இருந்து கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி பற்றிய நிலைப்பாடுகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் முக்கியமான விவாதமாக வரவிருக்கும் தேர்தலில் மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா வேண்டாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் மோடி மீதான விமர்சனங்கள், மோடியின் நிறை குறைகள் மற்றும் மோடியின் கடந்த கால செயல்பாடுகள் ஆகியவற்றையும் தீவிரமாக விவாதித்துள்ளனர்.

நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அடுத்தத் தேர்தலில் பாஜக வின் பிரதமர் வேட்பாளராக மோடி வேண்டாம் என்ற் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் யர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...