மல்டி லெவல் மார்கெட்டிங் மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது!

ஜனவரி 09, 2019 448

ஐதராபாத் (09 ஜன 2019): மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கொண்ட கும்பலை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹாங்காங்கை சேர்ந்த விஜய் ஈஸ்வர் என்பவர் வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தனது நண்பர்களுடன் சேர்ந்து மலேசியா, மற்றும் சீனாவில் இந்த நிறுவனத்தை பதிவு செய்து வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். முன்னதாக 2001ம் ஆண்டில் கோல்ட் கியூஸ்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது க்யூ நெக்ஸ்ட் என்ற பெயரில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை தொடங்கி மோசடி செய்து வந்துள்ளனர்.

இந்த நிறுவனம் மூலம் விட்டமன் பவுடர்கள், ஹாலிடே பேக்கேஜ், நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை பதிவு செய்வதற்கு 10,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடுகளை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் மூலம் பல வேலையில்லாத இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...