பாபர் மசூதி இடம் தொடர்பான விசாரணை தொடங்கியது!

ஜனவரி 10, 2019 377

புதுடெல்லி (10 ஜன 2019): அயோத்தி பாபர் மசூதி தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

அயோத்தி பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்றில் இருந்து விசாரணை தொடங்க உள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்டார் அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரணை செய்கிறது.

இதைத் தொடர்ந்து 1992ல் பாபர் மசூதி இந்துத்வா பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டது. இது மிகப் பெரும் கலவரத்திற்கு இது வித்திட்டது. நாடு முழுக்க இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ளும்படி கூறியது.

அதன்படி சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் நிலத்தை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை மூன்று அமைப்புகளே ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் கடந்த 2010-ல் வந்த இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் விசாரணை 2019 மார்ச் மாதம் வரை விசாரணை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...