சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம்!

ஜனவரி 10, 2019 333

புதுடெல்லி (10 ஜன 2019): சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதலில் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இடைக்கால சிபிஐ இயக்குநராக பதவியேற்ற நாகேஸ்வர ராவ், அலோக் வர்மா அணியை சேர்ந்த 10 அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அலோக் வர்மாவை மீண்டும் பணியமர்த்துமாறு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ இயக்குநராக மீண்டும் பதவியேற்ற அலோக் வர்மா, 13 அதிகாரிகளை இடமாற்றம் செய்த இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுளை ரத்து செய்தார்.

இதனிடையே, அலோக் வர்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, குழுவின் கூட்டம் நடைபெற்றது.

ஆனால் இந்த கூட்டத்தில் எந்தவிதமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதனால் இடைக்கால சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் செய்த பணியிடமாற்றங்களை அலோக் வர்மா ரத்து செய்தார்.

இதற்கிடையே அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான கூட்ட முடிவில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...