பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட நடிகர் நடிகைகள்!

ஜனவரி 10, 2019 310

மும்பை (10 ஜன 2019): பிரதமர் மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பாலிவுட்டின் புதிய முகங்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அலியா பாட் மற்றும் வருண் தவான் உட்பட பல நட்சத்திரங்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு நடக்குவதற்க்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் பிரதமர் மோடி அவர்கள், பாலிவுட் தயாரிப்பாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது சினிமாவைப் பற்றிய பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் பிரதமர் விவாதித்தார். அதன பின்னர் சினிமா துறை மீதன ஜி.எஸ்.டி. வரியை குறைத்தது.

இந்நிலையில் திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தாரன் அதர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் நடிகர் ரன்வீர் சிங் செல்பி எடுக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...