காங்கிரஸ் கட்சி இளம் பெண்ணை கொன்று புதைத்த பாஜக தலைவர்!

ஜனவரி 13, 2019 473

போபால் (13 ஜன 2019): மத்திய பிரதேசத்தில் இளம் பெண்ணை கொலை செய்து எரித்து புதைத்துள்ளார் பாஜக தலைவர்.

மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த பாஜக தலைவர் ஜெகதீஷ் கரோடியா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரின் மகள் ட்விங்கிள் டாக்ரேவுக்கும் காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெகதீஷிடம் ட்விங்கில் கேட்டார்.

ஆனால் இதற்குன் ஜெகதிஷ் மறுத்துள்ளார். தொடர்ந்து ட்விங்கில் வற்புறுத்தவே, ட்விங்கிளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினார். அதன்படி ட்விங்கிலை தனியாக வரவழைத்து கழுத்தை நெறித்து கொலை செய்தார். மேலும் ட்விங்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்து ஓர் இடத்தில் புதைத்துவிட்டார்.

இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று ட்விங்கிளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசுக்கு ஜெகதீஷ் மீதும் ட்விங்கிலின் பெற்றோர் மீதும் சந்தேகம் வந்தது. இருவரையும் மூளை மின் அலை ரேகைப் பதிவு மூலம் நடத்திய சோதனைய்ல் ஜெகதீஷ்தான் ட்விங்கிலை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ஜெகதீஷ் கொடுத்த அடையாளத்தின் பேரில் ட்விங்கிலை புதைத்த இடத்தை தோண்டியபோது ட்விங்கிலின் பிரேஸ்லெட் மற்றும் சில ஆபரணங்கள் கைபற்றப் பட்டன.

தற்போதுன் ஜெகதீஷ் மற்றும் அவரதுன் குடும்பத்தினர் கைதுப் செய்யப் பட்டுள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...