யார் அந்த 14 வயது சிறுமி? - ராகுலிடம் கேள்வி கேட்டதாக பரவும் பொய் தகவல் (வீடியோ)

ஜனவரி 14, 2019 2174

சென்னை (13 ஜன 2019): சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் திணறியதாக ராகுல் காந்தி மீது அவதூறு செய்தி பரப்பி சிக்கிக் கொண்டன இந்துத்வா ஊடகங்கள்.

ராகுல் காந்தியின் துபாய் சுற்றுப் பயணத்தின் போது துபாய் கிரிக்கெட் மைதானத்தில் பல்லாயிரக் கணக்காணோர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் இந்தியர்கள் முன்னிலையில் ராகுல் உரையாற்றினார். அரை மணிநேர உரை என்றபோதிலும் பலரையும் அவரது பேச்சு கவர்ந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 14 வயது சிறுமி ராகுலிடம் கேள்வி கேட்டதாகவும் அப்போது ராகுல் காந்தி திணறியதாகவும் நேரலை பாதியிலேயே நிறுத்தப் பட்டதாகவும் தினமலர் உள்ளிட்ட மோடி ஆதரவு பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

ஆனால் அது உண்மையல்ல கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பேசிய சித்தி பாக்வே (SIDDHI BAGWE) என்ற சிறுமியின் பேச்சை இந்துத்வா ஊடகங்கள் சாமர்த்தியமாக எடிட் செய்து பரப்பியுள்ளன என்பது தற்போது தெரிய வந்துள்ளது .

உண்மையான வீடியோ இதோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...