நர்சிடம் டாக்டர் செக்ஸ் சில்மிஷம் - சிக்கிய வீடியோ!

ஜனவரி 14, 2019 10073

உஜ்ஜெய் (14 ஜன 2019): உஜ்ஜெய் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில், செவிலியருக்கு முத்தம் கொடுத்த மருத்துவரை மாவட்ட ஆட்சியர் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய் மாவட்ட அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கும் 49-வயது ஆண், தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் செவிலிய பெண் ஒருவருக்கு மருத்துவமனையில் வைத்து முத்தம் கொடுத்தாள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரை அதிரடியாக நீக்கி மாவட்ட ஆட்சியர் சஷாங் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். கோட்பாடுகளை மீறி செயற்பட்டதாக இவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்டு அறிவிப்பு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை., மருத்துவரின் விளக்கத்திற்கு பின்னரே எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...