உத்திர பிரதேசம் கும்பமேளாவில் திடீர் தீ விபத்து!

ஜனவரி 14, 2019 576

லக்னோ (14 ஜன 2019): உத்திர பிரதேச மாநிலம் பிரயாகராஜ் (அலஹாபாத்) கும்ப மேளா துவங்கவுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரியாகராஜ் என பெர்மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தின் முதல் கும்பமேளா வரும் ஜனவரி 15 ஆம் நாள் துவங்கி வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது. எதிர்வரும் விழாவை முன்னிட்டு ₹4300 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, விழாவிற்கு வரும் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை இறக்குவதற்கு ஏதுவாக ஹெலிப்போர்ட் எனப்படும் இறக்குதளம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திகம்பர் காட் அருகே அமைக்கப்பட்டுள்ள, திகம்பர் அகாடா குடிலில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி வருவதால், ஏராளமான குடில்கள் தீக்கிரையாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்காலிக குடிலில் பயன்படுத்தப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததே, தீ விபத்திற்கு காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரியகராஜில் கும்ப மேளா வரும் ஜனவரி 15-ஆம் தேதி துவங்கி மார்ச் 4-ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...