தொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ஜனவரி 14, 2019 380

புதுடெல்லி (14 ஜன 2019): தொலை தொடர்பில் மோடி அரசு ரூ 69,381 கோடி அளவில் முறைகேடு செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா மோடி அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். மோடி அவரது நண்பர்களான ரிலையன்ஸ், ஜியோ மற்றும் சிஸ்டம்டா ஷியாம் டெலிகாம் ஆகியோருக்கு மட்டும் மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ராம் உரிமையை வழங்கியிருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 101 விண்ணப்பங்கள் வந்த நிலையில் மோடி தனது நண்பர்களுக்கு மட்டும் உரிமை வழங்கியிருப்பதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று பவன் கேரா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...