சபரிமலை சென்ற பெண் மீது கொடூர தாக்குதல்!

ஜனவரி 15, 2019 483

திருவனந்தபுரம் (15 ஜன 2019): சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா கொடூரமாக தாக்கப் பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சபரிமலைக்குள் கடந்த ஜனவரி 2-ஆம் நாள் கனக துர்கா(39), பிந்து அமினி (40) ஆகிய இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்தனர்.

கடும் எதிர்ப்பையும் மீறி, சபரிமலைக்கு சென்ற கனகா துர்கா, பிந்து அமினி ஆகிய இருவரும் சம்பவநாள் அடுத்து தலைமறைவாகினர். கடந்த இரண்டு வாரங்களலாக இவர்கள் இருவரும், கொச்சி புறநகர் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது வீடு திரும்பிய கனக துர்கா, கொடூரமாக தாக்கப் பட்டுள்ளார். அவரை அவரது வீட்டினரே தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவருக்கு இந்துத்வாவினரின் எதிர்ப்பு இருந்ததால் அவரை தாக்கியவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலத்த காயமடைந்த கனக துர்கா, மலப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...