பெண் வன்புணர்வு - குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை!

ஜனவரி 15, 2019 449

லக்னோ (15 ஜன 2019): உத்திர பிரதேசத்தில் பெண் ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கொண்டா மாவட்டம் கெர்னல்கஞ்ச் என்ற ஊரைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்கு தாயான பெண் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சங்கர் தயாள், அசோக் குமார் என்ற இரண்டு கொடூரர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டார். .

மேலும் இதை அவர்கள் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளனர். ஆனால் குற்றவாளிகள் இருவரும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர்.

இதனால் விரக்தி அடைந்த அந்தப் பெண் தனது வீட்டில் உள்ள கூரையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...