மோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்!

ஜனவரி 16, 2019 558

புதுடெல்லி (16 ஜன 2019): பிரதமர் மோடி வாங்கிய விருதுக்காக ராகுல் காந்தி நக்கலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'பிலிப் கோட்லர்'விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பிலிப் கோட்லரின் பெயரில், , பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில், நடந்த நிகழ்வில் மோடி விருதைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ,"புகழ் பெற்ற இந்த விருதை பெற்றுள்ள பிரதமர் மோடியை நான் வாழ்த்துகிறேன். ஏனென்றால் இப்படிப் பட்ட விருது உலகிலேயே இல்லை. இந்த விருதை தேர்ந்தெடுக்க நடுவர் குழு கூட இல்லை அப்படிப் பட்ட விருது சிறப்புக்குரியதல்லவா?" என்று வாழ்த்தியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பதாஞ்சலி மற்றும் ரிபப்ளிக் டிவி என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருப்பது ஹைலைட்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...