அருண் ஜேட்லி விரைவில் குணமடைய ராகுல் காந்தி பிரார்த்தனை!

ஜனவரி 17, 2019 456

புதுடெல்லி (17 ஜன 2019): சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜேட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரார்தனை செய்து ட்விட் பதிவு இட்டுள்ளார்.

அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், 2018ல், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின், உடல்நிலை சீரானதை அடுத்து, கடந்தாண்டு, ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை, ஏற்றுக் கொண்டார்.

மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின், கடைசி பட்ஜெட்டை, வரும், பிப்., 1-ம் தேதி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், பொதுத் தேர்தலுக்கு முந்தைய, இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராவிதமாக, நேற்று, மருத்துவ பரிசோதனைக்காக, அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் அருண்ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள தகவல் அறிந்த ராகுல் காந்தி, அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு குறித்த தகவல் கவலை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அன்பு என்றென்றும் உண்டு. நாங்கள் உங்களுடன் உள்ளோம், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்" என்று ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...