பயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது!

ஜனவரி 17, 2019 477

தாம்போலி (17 ஜன 2019): பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த பாஜக பயங்கரவாதி தஞ்சன் குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தாம்போலி பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் பாஜகவை சேர்ந்தவர் தஞ்சன் குல்கர்னி. அவரது கடையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 170 வகையான பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ந்த போலீசார் தஞ்சன் குல்கர்னியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

முன்னதாக் குல்கர்னி குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் பல இடங்களில் ரகசியமாக ஆயுதங்கள் வாங்குவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வாடிக்கையாளரை கடைக்கு அனுப்புவதுபோல் அனுப்பி குல்கர்னி பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கைபற்றப்பட்ட ஆயுதங்கள் சுமார் 2 லட்சம் மதிப்பு இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...