அடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர்கள்!

ஜனவரி 17, 2019 457

புதுடெல்லி (17 ஜன 2019): பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது பாஜக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அவர்களின் ஆட்சி முடிய இன்னும் நான்கு மாதங்களே உள்ளது. அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்கான கூட்டணி வேலைகளில் பாஜக முமுரமாக உள்ளது.

இந்நிலையில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு ஏற்ப்பட்ட காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் அமைச்சராக ரவிசங்கர் பிரசாத்துக்கு, கடந்த திங்கள்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லிக்கு, கடந்த வருடம் (2018) அவருக்கு சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்தே அவருக்கு உடலில் அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று இருக்கிறார்.

முன்னதாக கோவா மாநிலத்தின் முதலமைச்சரான மனோகர் பாரிக்கரருக்கு ஏற்ப்பட்ட பாதிப்பால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...