சபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தகவல்!

ஜனவரி 19, 2019 443

திருவனந்தபுரம் (19 ஜன 2019): சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி, ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். கேரள அரசு இப்போது தான் முதல் முறையாக 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 51 பேர் சபரிமலை கோவிலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளது. இது கேரளாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது, “இதுவரை 7,564 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் வரிசைப்படி 51 பெண்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர்." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...