இன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வைப்பு!

ஜனவரி 20, 2019 746

பெங்களூரு (20 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வைத்திருப்பது குமாரசாமி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ரமேஷ் ஜார்கிஹோளி, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் களுடன் டில்லி சென்றிருந்தார்.

இந்த பரபரப்பான நிலையில், காங், எம்.எல்.ஏ.,க் கள் சிறப்பு கூட்டம், பெங்களூரில் நேற்று நடந்தது. மேலும் பாஜக எந்த நேரத்திலும் கங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிவிடுமோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வேண்டும் என்று மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...