பாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா? - அதிரவைக்கும் தகவல்!

ஜனவரி 20, 2019 422

புதுடெல்லி (20 ஜன 2019): பாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு கடன் அளவு 82 லட்சம் கோடி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.

பாஜக ஆட்சியில் கடன்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் இருந்த கடன்களை ஒப்பிடும்போது தற்போதுள்ள கடன்கள் கணிசமாக உயர்ந்துள்ளது.

தற்போது சமர்ப்பிக்கப் பட்டுள்ள அறிக்கையில் கடன் விவரங்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளன. அதில் கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசாங்க கடன்கள் 49 சதவீதம் அதிகரித்து 82 லட்சம் கோடி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் வரை மட்டும் 82,03,253 கோடி ரூபாயை மத்திய அரசு கடனாக வாங்கியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் 54,90,763 கோடியாக இருந்த இக்கடன் தற்போது 49 சதவீதம் அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பொது கடன் 48 லட்சம் கோடியில் இருந்து 73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 51.7 சதிவீதம் உயர்வாகும். அதனால் உள் கடன் 54 சதவீதம் உயர்ந்து 68 லட்சம் கோடி ஆகியுள்ளது.

சந்தைக் கடன்கள் என்ற அடிப்படையில் பார்த்தோமானால் கிட்டத்தட்ட அதே அளவுக்கு கடன் உயர்ந்துள்ளது. 47.5 சதவீதம் உயர்ந்துள்ள சந்தை கடனானது 52 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதிப்பகுதியான 2014ம் ஆண்டில் தங்க ஒப்பந்தங்கள் மூலம் கடனே இல்லாத நிலை இருந்தது. ஆனால் அது தற்போது அதிகரித்து, 9,089 கோடியாக உயர்ந்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...