அமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்!

ஜனவரி 20, 2019 317

புதுடெல்லி (20 ஜன 2019): பன்றிக் காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நெஞ்சு வலி, மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான பிரச்சினைகளுக்காக கடந்த 16-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அன்று இரவு 9 மணி அளவில் வார்டில் அமித் ஷா சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் சீரான நிலையில் இன்று அமித் ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...