காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு!

ஜனவரி 23, 2019 411

புதுடெல்லி (23 ஜன 2019): உத்திர பிரதேச மாநிலம் கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பிரியங்கா காந்தியை நியமித்திருப்பதாக தகவல் வெளியாகிறது.

பிப்ரவரி முதல் வாரம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பதிவியேற்பார் எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை காங்கிரஸார் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...