கணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி!

ஜனவரி 23, 2019 363

ஒடிசா (23 ஜன 2019): வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த கணவனின் மர்ம உறுப்பை மனைவி அறுத்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருந்ததாக தெரிகிறது. இதனையறிந்த அந்த நபரின் மனைவி, கணவனிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டனர். இந்நிலையில் மனைவி நடு ராத்திரியில் எழுந்து கணவனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்தார்.

வலியால் துடித்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் அந்த நபரின் மனைவி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...