பாபர் மசூதி விவகாரம் இப்போதைக்கு முக்கியமல்ல: அகிலேஷ் யாதவ்!

ஜனவரி 28, 2019 474

லக்னோ (28 ஜன 2019): விவசாயிகள் பிரச்சனைதான் இப்போதைக்கு முக்கியம் பாபர் மசூதி விவகாரம் முக்கியமல்ல என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் குடியரசு தின விழாவின் போது பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் உச்ச நீதிமன்றம் அவசியமில்லாமல் ராமர் கோவில் - பாபர் மசூதி வழக்கை இழுத்தடிப்பதாக குற்றஞ் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனை பல உள்ளன. அதை விடுத்து ராமர் கோவில், பாபர் மசூதி என பிரச்சனையை திசை திருப்ப வேண்டாம். விவசாயிகள் பிரச்சனைதான் இப்போதைக்கு மிக முக்கிய பிரச்சனை அதற்கு தீர்வு காணுங்கள் என்று அகிலேஷ் தெரிவிதார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...