இந்துப் பெண்கள் கையை தொட்டவன் கையை வெட்ட வேண்டும் - மத்திய அமைச்சர் அனந்த் குமார்!

ஜனவரி 28, 2019 439

பெங்களூரு (28 ஜன 2019): இந்து பெண்களை எவராவது தொட்டால், அவரின் கை இருக்க கூடாது என மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருக்கும் அனந்த்குமார் ஹெக்டே, கர்நாடக மாநில குடகு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், நமது சமுதாயத்தின் முன்னுரிமைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். சாதியைப் பற்றி சிந்திக்க கூடாது. இந்து பெண்ணை எந்த கையாவது தொட்டால், அந்த கை இருக்க கூடாது என்றார்.

இதற்கு முன்பு, சபரிமலை விவகாரத்தில் இந்து மக்கள் மீதான கேரள அரசின் அடக்குமுறையை, பட்டப்பகலில் நடந்த பாலியல் வன்கொடுமை என்று அனந்த்குமார் ஹெக்டே பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...