பெற்றோர் துபாயில் - மகள் தனிமையில் செய்த காரியம்!

ஜனவரி 28, 2019 534

மும்பை (28 ஜன 2019): மகளை தனிமையில் விட்டு பெற்றோர் துபாயில் இருக்க விரக்தியில் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த டமானி என்ற 19 வயது இளம்பெண் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். இவரது பெற்றோர் இருவரும் துபாயில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் டமானி என்றும் தனிமையிலே இருந்து வந்துள்ளார். வாழ்க்கையையும் தனிமையையும் வெறுத்த அவர், தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்க்கை நடத்த பணம் கண்டிப்பாக முக்கியம் தான். ஆனாலும் குழந்தைகளின் சந்தோஷமும் முக்கியம் தான். ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறிது நேரமாவது செலவழிக்க வேண்டும். டமானியின் பெற்றோர் இதை செய்ய தவறியதால், இன்று அவர்களது மகளை இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...