இசை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - நிக்காஹ் செய்து வைக்க மறுத்த முஸ்லிம் மதகுரு!

ஜனவரி 30, 2019 774

புதுடெல்லி (30 ஜன 2019): இசை மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருந்ததால் முஸ்லிம் மதகுரு மணமக்களுக்கு நிக்காஹ் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபுவா பகுதியில் நடைபெற்ற முஸ்லிம் திருமணத்தில், நிக்காஹ் செய்து வைக்க மதகுரு ஹாஜி ஹாரூன் ரஷீத் என்பவரை திருமண வீட்டார் நியமித்திருந்தனர். திருமணம் நடைபெற ஒரு மணி நேரத்திற்கு முன்பு மதகுரு ஹாஜி ஹாருன் ரஷீத் நிக்காஹ் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து திருமண வீட்டுக்கு வர மறுத்து விட்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முஸ்லிம் மதத்தில் இசை ஆட்டம் பாட்டம் உள்ளிட்டவை ஹராமாக்கப் பட்டுள்ளது, இசையில்லா பாடலுக்கு அனுமதி உண்டு. ஆனால் குறிப்பிட்ட இந்த திருமணத்தில் இவை அனைத்தும் இருந்ததால் நான் நிக்காஹ் செய்து வைக்க மறுத்து விட்டேன். அதுமட்டுமல்ல ஏற்கனவே இப்பகுதியில் இரண்டரை வருடங்களுக்கு முன்பே முஸ்லிம் திருமணங்களில் ஆடல் இசை இருந்தால் நிக்காஹ் செய்ய வரமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம், ஆனால் அதனையும் மீறி இதுபோன்ற செயல்களில் திருமண வீட்டார் ஈடுபட்டுள்ளனர்." என்று தெரிவித்தார்.

மதகுரு ஹாஜி ஹாருன் ரஷீத் அப்பகுதி மணமக்களுக்கு நிக்காஹ் செய்து வைப்பவர், திடீரென அவர் மறுத்துவிட்டதால் வேறொரு மதகுருவை ஏற்பாடு செய்த திருமண வீட்டார் திருமணத்தை குறித்த நேரத்தில் நடத்தி வைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...