மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மோடியின் கல்விச் சான்றிதழ் விவகாரம்!

பிப்ரவரி 01, 2019 462

புதுடெல்லி (01 பிப் 2019): போலி சான்றிதழ் மூலம் பட்டம் பெற்றதாக கூறும் பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் கேட்பது அபத்தம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த செவ்வாயன்று 2000 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடையே உரையாற்றினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆனந்த் ஷர்மா, மோடியின் கல்வி சான்றிதழ் குறித்தும் அதன் உண்மை தன்மை குறித்தும் இதுவரை ரகசியமாகவே உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டதற்கும் மோடிக்கு பட்டம் வழங்கியதாக கூறப்படும் பல்கலைக் கழகம் பதில் அளிக்கவில்லை. இப்படி மோடியின் கல்வியே கேள்விக் குறியாக இருக்கும் போது அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது சரியானது அல்ல. என்று தெரிவித்துள்ளார். மேலும் மோடியின் பேச்சை மாணவர்கள் கேட்கக் கூடாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தீனதயாள் உபதயா யார்? அவருக்கு எதற்கு நினைவஞ்சலி மோடி நடத்துகிறார்? அவர் நாட்டுக்காக என்ன செய்தார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களின் நினைவு நாள் குறித்து பாஜக கவனம் செலுத்தியுள்ளதா? என்றும் ஆனந்த் ஷர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...