மோடி கலந்து கொண்ட பொது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம்!

பிப்ரவரி 02, 2019 420

கொல்கத்தா (02 பிப் 2019): பிரதமர் மோடி கலந்து கொண்ட பொது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பில் தேர்தல் பிராச்சாரம் மேற்கொண்டார். தாகூர் நகர் என்ற பகுதியில் நடந்த பொது கூட்டத்தில் மைதானத்தின் நடுவே பெண்களுக்கான இடம் அமைக்கப்பட்ட நிலையில், மைதானத்துக்கு வெளியே பல நூறு ஆண் தொண்டர்கள் உள்ளே வருவதற்கு முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்தனர்.

அதனை அடுத்து துர்காபூர் பகுதியில் பாஜக பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தாகூர் நகர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்காக பொது மக்களிடம் மோடி வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...