திருப்பதி கோவிலில் தங்க கிரீடங்கள் கொள்ளை!

பிப்ரவரி 03, 2019 406

திருப்பதி (03 பிப் 2019): திருப்பதி கோவிலில் மூன்று தங்க கிரீடங்கள் கொள்ளை போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி உற்சவர்களுக்கு அலங்கரிக்க பயன்படுத்தபடும் 3 தங்க கிரீடங்கள் கொள்ளை போயுள்ளன. நேற்று மாலை கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர். பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோவிலுக்கு வரவழைத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் காணாமல் போன கிரீடத்தை கண்டு பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் அன்புராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...