பீகாரில் ரெயில் விபத்து - 7 பேர் பலி!

பிப்ரவரி 03, 2019 322

பாட்னா (03 பிப் 2019): பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் வைஷாலி அருகே சஹதாய் பஜர்க் என்ற இடத்தில் சீமான்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இச்சம்பவம் அதிகாலை 3.50 மணிஅளவில் நடந்துள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ 5 லட்சமும், காயம் அடைந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 1 லட்சமும் வழங்கப்படும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...