காவல் நிலையம் மீது வெடி குண்டு வீசிய வழக்கில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கைது!

பிப்ரவரி 03, 2019 504

திருவனந்தபுரம் (03 பிப் 2019): கேரளாவில் காவல் நிலையம் மீது வெடி குண்டு வீசிய வழக்கில் ஆர் எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி பிரவீன் உட்ப்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அங்கு பெண்கள் நுழையக் கூடாது என்று ஜனவரி 2 ஆம் தேதி பாஜக கேரளாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அப்போது அங்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது நெடுமங்காடு காவல் நிலயம் மீது வெடிகுண்டு வீசப் பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அபிஜித் மற்றும் பிரவீன் உள்ளிட்ட இரண்டு இந்துத்வா பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கலவரத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் பலரை போலீசார் கைது செய்தனர். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...